×

விபத்தில் இறந்த இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் பேனர் வைப்பதை தடுக்க புதிய சட்டம்: டி.ஆர்.பாலு பேட்டி

தாம்பரம்: குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரை சேர்ந்த ரவி - கீதா தம்பதியின் ஒரே மகள் சுபஸ்ரீ  (23), கடந்த ஆண்டு பி.டெக். முடித்துவிட்டு துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 12ம் தேதி மதியம் பணிமுடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சென்றபோது, சாலையில் அதிமுக பிரமுகர் இல்ல வரவேற்பு பேனர்களில் ஒரு பேனர் சரிந்து சுப  மீது விழுந்தது. இதில் தடுமாறி விழுந்த அவர்மீது தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், நேற்று  காலை குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி

நகரில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற திமுக முதன்மை செயலாளரும், ஸ்ரீ பெரும்புதூர் நாடளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு சுபயின் தந்தை ரவி, தாய் கீதா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். உடன் பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி இருந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறுகையில்,  ‘‘பேனர் வைக்ககூடாது என எங்கள் கட்சி  தலைவர் கண்டிப்பான உத்தரவை கட்சியினருக்கு போட்டுள்ளார்.

பேனர் தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சட்டமன்றம் கூடும்போது எங்கள் கட்சி தலைவர் நிச்சயமாக எழுப்புவார். இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்கள் கட்சி தலைவர் உறுதியாக இருக்கிறார்.ஒரே மகளை இழந்து விட்டார்கள், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. இறந்த சுபஸ்ரீ   பெற்றோர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எங்கள் தலைவர், அவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சொன்னார். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ஒரே மகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. உரிய நடவடிக்கை அரசு
எடுக்க வேண்டும். சுபஸ்ரீ பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை அரசு கொடுக்க வேண்டும். இதற்காக வருகிற 20ம் தேதி மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து பேசவுள்ளேன்’’ என்றார்.


Tags : death ,teenager , Banner, New Law, DR Balu, Interview
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...