தர்மபுரி வழியாக செல்லும் 8 வழிச்சாலைக்கு நிலத்தை தர விவசாயிகள் ஒப்புதல்: அமைச்சர் அன்பழகன் பேட்டி

தர்மபுரி: தர்மபுரி வழியாக செல்லும் 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் எந்த எதிர்ப்பும் இன்றி தங்களது நிலத்தை தர கையெழுத்திட்டுள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார். தர்மபுரியில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் நேற்று அளித்த ேபட்டி: தர்மபுரி மாவட்டத்தின் வழியாக செல்லும் 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் எந்த எதிர்ப்பும் இன்றி தங்களது நிலத்தை தர கையெழுத்திட்டுள்ளனர். எண்ணேகொல்புதூர், அழியாளம் அணைக்கட்டு திட்டம், ஜெர்தலாவ் முதல் புலிகரை ஏரி வரையிலான திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நிறைவு பெற்றுள்ளது.

தர்மபுரி மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தில் 8 கிலோ மீ. தூரத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான கோப்புகள் வந்தததும் நிதி ஒதுக்கி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ரயில்வேயிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கு 11.5.2019 அன்று நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. அரசு நிலம் 802 ஏக்கர், பட்டா நிலம் 5 ஏக்கர் ஆகும், இதில் அரசு நிலம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தாமாக முன்வந்து தர்மபுரி விவசாயிகள் ஒப்புதல் கையெழுத்து போட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: