×

தண்டராம்பட்டு அருகே வாணிபக் கிடங்கில் வெயில், மழையில் வீணாகும் அம்மா உப்பு: பொதுமக்கள் வேதனை

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே வாணிபக் கிடங்கில் அம்மா உப்பு மூட்டைகள் வெயில், மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் சமத்துவபுரம் அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள 113 நியாயவிலை கடைகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், உப்பு போன்ற ரேஷன் பொருட்கள் லாரி மூலம் தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, 200க்கும் மேற்பட்ட அம்மா உப்பு மூட்டைகள் வாணிபக் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் அனைத்து உப்பு மூட்டைகளும் வெளியிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே, உப்பு மூட்டைகள் வீணாகி வருவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டபோது, `தற்போது கிடங்கில் போதிய இடவசதியில்லை. எனவே, வெளியிலேயே வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உப்பு மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைத்து மூட்டைகளும் இங்கிருந்து எடுத்து செல்லப்படும்’’ என்றனர்.

Tags : warehouse ,Dandarampattu , Tandarampattu, commercial warehouse, rain, mother salt, civilians, torment
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...