×

சொல்லிட்டாங்க...

தொழில்துறை சரிவை நினைத்து வருந்த வேண்டாம். வாழ்க்கை ஒரு வட்டம். இதில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி வரும். மகிழ்ச்சியும், துக்கமும் கலந்து வரும். - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

விதவிதமான பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் தரும் என்பதை கல்வித்துறை அமைச்சர் உணராதது கவலையளிக்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்தி மொழியை கையிலெடுத்து நாட்டில் கலவரத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அமித்ஷா இறங்கியுள்ளார். - கேரள முதல்வர் பினராய் விஜயன்.

மத்திய அரசு திவாலாகும் நிலையில் இருக்கிறது. மத்திய அரசின் நிதி நிலையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.


Tags : Industry, General Elections, White Paper
× RELATED எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை...