செம்பாக்கம் நகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்: கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு, அண்ணா தெரு, இம்மானுவேல் தெரு மேற்கு ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இங்குள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி, கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிககை எடுக்காததால், பல நாய்கள் சொறி பிடித்தும், வெறி பிடித்தும் காணப்படுகிறது. இவை, சாலையில் கொட்டப்படும் உணவுகள், இறைச்சிக் கழிவுகளை சாப்பிட்டு, ஆங்காங்கே கும்பலாக சுற்றித் திரிகின்றன. இவை, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து வருவதால், மக்கள் வெளியில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் விரட்டுவதால், பலர் தவறி விழுந்து படுகாயமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: