×

18ம் தேதி புரட்டாசி மாதம் துவக்கம் எதிரொலி மட்டன், சிக்கன் கடைகளில் மக்கள் அலைமோதல்: அரை மணிநேரம் முதல் 2 மணிநேரம் வரை வரிசையில் நின்று வாங்கினர்

சென்னை: புரட்டாசி மாத விரதம் வரும் 18ம் தேதி துவங்க உள்ளதால், ஆவணி மாத இறுதி ஞாயிறான நேற்று, மட்டன், சிக்கன் மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களில் இதே நிலை காணப்பட்டது. தமிழகம் முழுதும் புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதனமான புரட்டாசி வரும் 18ம் தேதி பிறக்கிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள்.

எனவே இந்த மாதத்தில் கடைசி ஞாயிற்று கிழமை என்பதாலும் 18ம் தேதி புரட்டாசி மாதம் துவங்குவதாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களில் இறைச்சி கூடங்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை, வானகரம், பட்டினப்பாக்கம், காஞ்சிபுரம் இறைச்சி மார்க்கெட், நேரு மார்க்கெட், திருவள்ளூர் பெரியகுப்பம் மீன் மார்க்கெட், நகராட்சி மீன் மார்க்கெட், தபால் நிலையம் அருகில் உள்ள அனைத்து மட்டன் மற்றும் சிக்கன் கடைகளில் இருந்து மக்கள் அதிகளவு இறைச்சி வாங்கிச் சென்றனர். இதனால், இறைச்சி கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நாளை (செவ்வாய் கிழமை) முருகனுக்கு உகந்த நாள் என்பதால் இறைச்சியை பொதுமக்கள் தவிர்ப்பார்கள். மறுநாள் புதனன்று புரட்டாசி பிறக்கிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் விற்பனை களை கட்டியது. புதன் கிழமை முதல் ஒரு மாதத்துக்கு மீன், சிக்கன் போன்றவைகளின் விலை குறைவாக இருக்கும். புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதத்தில் மக்கள் அதிகம் கொண்டாடும் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு உணவு அயிட்டங்களின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஐப்பசி மாதம் முடிந்தபிறகு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பன் மற்றும் முருகன் சுவாமிகளுக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்கள் அதிகளவு உள்ளதால், திரும்பவும் அந்த மாதத்தில் அசைவ அயிட்டங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Tags : crowds ,chicken shops , 18th of the month
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...