முறைகேட்டை தடுக்க புது முடிவு ஜிஎஸ்டி பதிவு செய்ய ஆதார் கட்டாயமாகிறது: ஜனவரி 1ம் தேதி அமல்

புதுடெல்லி: புதிய டீலர்கள் ஜிஎஸ்டி பதிவு செய்வதற்கு அடுத்த ஆண்டு முதல் ஆதார் கட்டாயம் ஆக்கப்படுகிறது.வரி வருவாயை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், போலி பில்கள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகள் நடந்து வருகின்றன. இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் புதிய முயற்சியாக, அமைச்சர்கள் குழு கூட்டத்தில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, இதுகுறித்து ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு தலைவரும், பீகார் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி கூறியதாவது:ஜிஎஸ்டி முறைகேட்டை தடுக்கும் வகையில், புதிய டீலர்கள் பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.இதற்கு முன்பு ஆதார் மூலம் சரிபார்ப்பது டீலர்களின் விருப்ப தேர்வாக மட்டுமே இருந்தது. இனி, ஆதார் மூலம் மட்டுமே சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 2 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போலி பில்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். எனவேதான் இந்த புது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பு செய்ய விரும்பாதவர்களுக்கு, நேரடியாக சென்று விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும். இதற்கு 3 நாட்கள் ஆகும். ஜிஎஸ்டி ரீபண்ட் வழங்குவது கடினமான பணியாக உள்ளது. எனவே, வரும் 24ம் தேதியில் இருந்து ஆன்லைன் முறையில் ஒற்றை சரிபார்ப்பு மூலம் ரீபண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வது மிகவும் எளிமைப்படுத்தப்படும். இது அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது என்றார்.

Advertising
Advertising

Related Stories: