22வது முறையாக அத்வானி சாம்பியன்

மாண்டலே: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 22வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். மியான்மரில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில், உள்ளூர் நட்சத்திரம் நே த்வாய் ஊவுடன் நேற்று மோதிய பங்கஜ் அத்வானி (34 வயது) 6-2 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று உலக கோப்பையை முத்தமிட்டார். கடந்த ஆண்டு பைனலிலும் இதே வீரரை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப்பில் அத்வானி வென்ற 22வது சாம்பியன் பட்டம் இது. தொடர்ந்து 4வது ஆண்டாக அவர் இந்த தொடரில் வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.


Tags : Advani , Advani, champion, the 22nd time
× RELATED பல்கலைக்கழக கால்பந்து எம்ஓபி சாம்பியன்