கவனத்தை திசைதிருப்பி நகை பறித்த தாய், மகள் உட்பட 3 பேர் கைது

சென்னை: வடசென்னையில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை கொள்ளையடித்த தாய், மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ரவ ரோகிணி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுவண்ணாரப்பேட்டை லக்ஷ்மி அம்மன் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி சென்னை ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது லஷ்மி அம்மன் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 3 பெண்கள் ஆட்டோவில் ஏறி உள்ளனர்.  

Advertising
Advertising

அப்பொழுது அவர்கள் ரவ ரோகிணியிடம் கழுத்தில் செயின் அணிந்திருந்தால் யாராவது அறுத்து செல்வார்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து தனது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை மணிபர்சில் போட்டு கையில் கொண்டுவந்த கை பையில் போட்டுள்ளார். பின்னர் ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிலையத்தில் இறங்கும் பொழுது கைப்பையில் வைத்திருந்த மணி பர்சை காணவில்லை என அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனுவை கொடுத்தார் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தனர்.  

இதேபோல் சென்னை திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை, ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களிலும் துணி கடைகளிலும் கோவில் கும்பாபிஷேகம் போன்ற இடங்களில் பெண்கள் அதிக கூட்டமாக கூடும் இடங்களில் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அளவிற்கு பேச்சுக் கொடுத்து அவர்களிடம் நகை பறித்துக்கொண்டு செல்வதாக கடந்த 6 மாதமாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலக்ஷ்மி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனையடுத்து தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த மரியா (45), அவரது மகள் ஜோதி மற்றும் பஞ்சவர்ணம் எனத் தெரிந்தது. இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Related Stories: