பெண்ணுக்கு டார்ச்சர் ஐடி வாலிபர் அதிரடி கைது

சென்னை: சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (25). இவர் கடந்த 2016ம் ஆண்டு சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐ.டி. சாப்ட்வேர் நிறுவனத்தில்வேலை செய்தபோது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். இதன்பிறகு, நவீன்குமார் துபாய்க்குச் சென்று விட்டார். எனினும் சோழிங்கநல்லூர் பெண்ணுக்கு செல்போன் மூலம் டார்ச்சர் கொடுத்தார். இந்நிலையில் கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதனை அறிந்த நவீன்குமார் துபாயில் இருந்து கடந்த மாதம் சென்னை வந்தார். சென்னை வந்த நவீன்குமார் அந்த பெண்ணை நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பற்றி தவறாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று  செம்மஞ்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் தன்னை காதலிக்கும் படி டார்ச்சர் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் நவீன் குமாரை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: