×

வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது?.. என்பது பற்றி விரிவான விளக்கம் தேவை: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை: ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக உதயமான தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திமுக சார்பில் செப்டம்பர் 15ம் தேதி முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு முப்பெரும் விழா திருவண்ணாமலையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுவதாவது; முப்பெரும் விழாவை முப்பொழுது விழாவாக நடத்திக்காட்டிய ஏ.வ.வேலுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன்; திமுக முப்பெரும் விழாவை பொறுத்தவரை பேனர் எதுவும் வைக்கப்படவில்லை.

விளம்பரத்துக்காக கட்சியினர் கட்டும் பேனர்கள் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றி முழுமையான  வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் என்னென்ன முதலீடுகள் வந்துள்ளது?, என்பது பற்றி விரிவான விளக்கம் தேவை. 41 நிறுவனங்களின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அனைத்தையும் வெறுமனே முதல்வர் பார்வையிட்டார். கார் தொழிற்ச்சாலை, தனியார் மருத்துவமனை, மாட்டுப் பண்ணைகள் என்று அனைத்தையும் முதல்வர் வெறுமனே பார்வையிட்டார்  என கூறினார்.

14,394 மாணவர்களுக்கு 2.78 கோடியை கல்வி உதவித்தொகையாக திமுக வழங்கி உள்ளது. 70 ஆண்டுகள் பயணத்தில் திமுக பெறாத வெற்றிகளும் இல்லை; தோல்விகளும் இல்லை. 5 முறை தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. வெற்றி தோல்வியை ஒன்றாகக் கருதி கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் கட்சி தான் திமுக. சென்னையில் டைடல் பார்க், சிறுசேரி ஐ.டி. பூங்கா, போர்டு தொழிற்சாலை உள்ளிட்டவை திமுக ஆட்சியின் சாதனை தான். கலைஞர் பிறந்த நாளை ஜுன் 3-ம் தேதி இனி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார். கலைஞரின் பிறந்த நாளின் கலை மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் 5 சதவீதமாக குறைத்தது தான் மத்திய பாஜக அரசின் சாதனை. நிதிப் பற்றாக்குறை, மோட்டார் வாகன தொழில் வீழ்ச்சி உள்ளிட்டவையும் பாஜக ஆட்சியின் சாதனை. மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தாயமொழியாக அல்லாத இந்தி தாய் மொழியாக்க வக்காலத்து வாங்குவது ஏன்?. நாடு முழுவதும் ஒரே மொழி என்பது இந்தியை திணிக்கத்தான். இந்தித்திணிப்பு என்பது ஒரு கலாச்சாரப் படையெடுப்பு என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். இந்தித்திணிப்பு கலாச்சாரப் படையெடுப்பை தடுக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியை திணிக்கிற எந்த முயற்சியையும் திமுக தடுக்காமல் இருக்காது. இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்காகவும் திமுக தயாராக உள்ளது எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : Stalin ,speech ,ceremony , Travel abroad, investments, detailed description, Stalin
× RELATED ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத்...