×

பரோல் நிறைவுபெற்றதை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி: 51 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது

வேலூர்: நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில் தனது மகள் திருமணத்திற்க்காக பரோல் கேட்டு இருந்தார். இதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். 28 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு 30நாள் பரோலில் வெளியே வரும் மகளுக்கு தாய் பத்மா ஆரத்தி எடுத்து கண்ணீர் மல்க வரவேற்றார். நளினியும் தாயை பார்த்ததும் கண்கலங்கினார். பரோல் காலத்தில் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும். சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். துன்மார்க்கரென்று கெட்ட பெயர் பெற்றவர்களுடன் சேரக்கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கமோ, தனது உயிருக்கு பங்கமோ தேடிக்கொள்ள கூடாது என்று பல நிபந்தனைகளை சிறைத்துறை விதித்தது.

வீட்டிற்கு வந்த நிலையில் அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது 51 நாள் பரோல் காலம் முடிந்ததால் நளினி இன்று மாலை மீண்டும் வேலூர் பெண்கள்  சிறையில் அடைக்கப் பட்டார். மொத்தம் 7 வார கால பரோல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் நளினி மீண்டும் அடைக்கப்பட்டார்.

Tags : Nalini ,jail , Parole, Prison, Nalini
× RELATED நளினி, முருகன் தங்கள் உறவினர்களுடன்...