ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு: 30 பேர் மாயம்

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய 61 பேரில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். கோதாவரி ஆற்றில் மூழ்கிய 61 பேரில் 11 பேர் ஏற்கனவே கரை திரும்பிய நிலையில் தற்போது 12 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 60 பேர் பயணம் செய்தனர்.  அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் தேவிபட்டனம் அருகே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஆற்றில் 60 பேரை ஏற்றிய படகு நதியின் மைய பகுதிக்கு சென்றபோது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் பாதுகாப்பு உடைகள் இல்லாதால் பலர் தண்ணீரில் மூழ்கினர். 60 பேர் நீரில் மூழ்கிய நிலையில் 27 பேரை மீட்பு படையினர் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிட மீட்புப் படையினர் தேடி வந்தனர். மீட்பு பணியில் 2 குழுக்கள் ஈடுபட்டுள்ளது.

தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 60 பேரில் சிலர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றில் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: