×

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்ப்பு

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஸ்கூட்டியில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.பல தரப்பினரும் இதற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

விபத்துக்கு காரணமான பேனரை தயார் செய்த கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்தூர் வினாயகபுரத்தில் உள்ள சண்முகா டிஜிட்டல் பேனர் மற்றும் ஸ்டிக்கர் அச்சகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது.மேலும் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் எப்.ஐ.ஆரில்  கடும் கண்டனம் தெரிவித்தது. அதாவது பேனர் வைத்த ஜெயகோபாலின் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

மேலும் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகாரிகளிடம் வசூலித்துக் கொள்ளலாம். பேனர் வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும். பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவு  முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags : FIR ,death ,Subasree , Chennai, Banner, Subhasree, Prime Minister, FIR,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு