ஸ்பெயின் நாட்டில் தொடர் மழை : வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

மாட்ரிட்: தென்கிழக்குப் பகுதியான அலிகான்டே மாகாணத்தில் அண்மையில் தொடர்ச்சியாக 2 நாள்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாகாணத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள், பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அல்மேரியா பகுதியில் சுரங்கப்பாதை வழியாக காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி காரில் இருந்தபடியே உயிரிழந்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Advertising
Advertising

தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான கார்கள் மூழ்கின. மழை வெள்ளம் காரணமாக சுமார் 3500க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் சாலையோரத்தில் குப்பை போல குவிந்து கிடக்கின்றன. 100க்கும் அதிகமான கார்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும்  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, அவசரகால ராணுவ பிரிவு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: