பிரேசில் நாட்டில் சோகம் மருத்துவமனையில் தீ 11 முதியவர்கள் பலி

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின்ரியோ டி ஜெனிரோவில் செயல்பட்டு வரும் பாடிம் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் அனைத்து தளங்களுக்கும் பரவியது. தீயினால் உண்டான புகை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 65 வயதை கடந்த முதியோரில் 11 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சக்கர நாற்காலி, சக்கர படுக்கை, தூக்கு படுக்கை (ஸ்ட்ரெச்சர்) ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

Advertising
Advertising

தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக 100 மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடந்த பிப்ரவரியில் ஏர்கண்டிஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிளெமிங்கோ கால்பந்து அமைப்பை சேர்ந்த 10 இளம்வீரர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: