ஹாங்காங்கில் வன்முறை போராட்டம் நடத்தியவர்கள் மீது சீனா ஆதரவாளர்கள் தாக்குதல்

ஹாங்காங்: ஹாங்காங்கில் சீன ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற ஹாங்காங் 1997ல் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு மாறியது.

இந்த நிலையில் ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர். வார இறுதிநாட்களில் விமான நிலையங்களை முற்றுகையிட்டும், துறைமுகங்கத்திலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், வர்த்தக நகரமான ஹாங்காங்கில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 1400 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும், போர்ட்டஸ் ஹில் மாவட்டத்தின் அமோய் பிளாசாவில் நேற்று குவிந்த அரசுக்கு எதிரான மக்கள் திடீரென பிரபலமான போராட்ட எதிர்ப்பு பாடலை பாடினர். அப்போது அங்கு குவிந்த அரசு ஆதரவாளர்கள் பதிலுக்கு சீன நாட்டுக்கொடியை ஏந்தியபடி அந்த நாட்டின் தேசியகீதத்தை பாடினர். அப்போது இரு தரப்பினரும் திடீரென மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

Related Stories: