தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக கடும் ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த 4ம் தேதி காலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.30,120க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய தினம் மாலையிலேயே தங்கம் விலை சற்று சரிந்து ஒரு பவுன் ரூ.29,928க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 5ம் தேதி ஒரு பவுன் ரூ.29,928க்கும், 6ம் தேதி ரூ.29,264, 7ம் தேதி ரூ.29,368, 9ம் தேதி ரூ.29,272க்கும், 10ம் தேதி ரூ.29,192க்கும், 11ம் தேதி ரூ.29,072, 12ம் தேதி ரூ.28912க்கும் தங்கம் விற்கப்பட்டது.

Advertising
Advertising

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3,612க்கும், பவுன் ரூ.28,896க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது  தங்கம் விலை சரிவை சந்தித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.3,584க்கும், பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.28,672க்கும் விற்கப்பட்டது. வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த தங்கம், தற்போது குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: