இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை

லண்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, ஆர்ச்சரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 225 ரன்னுக்கு சுருண்டது. ஸ்மித் 80, லாபஸ்ஷேன் 48, லயன் 25 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர் 6, சாம் கரன் 3, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 69 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி 55 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 20, கேப்டன் ரூட் 21 ரன்னில் வெளியேறினர். டென்லி - ஸ்டோக்ஸ் இணை 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் குவிக்க, இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியது.

Related Stories:

>