சில்லி பாய்ண்ட்...

* ‘எப்போதும் இந்திய அணியின் நலன் குறித்தே சிந்திப்பவர் டோனி. சமீபத்தில் நான் வெளியிட்ட படம், தகவலால் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று சர்ச்சை கிளம்பியது துரதிர்ஷ்டவசமானது. ஓய்வு முடிவு தனிப்பட்ட வீரரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அனுபவத்துக்கு ஈடு இணை இல்லை. வயது என்பது ஒரு எண் மட்டுமே. அதை டோனியே பல முறை நிரூபித்திருக்கிறார்’ என்று இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.

* கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் அமித் பாங்கல் (23 வயது) தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் சீன தைபே வீரர் டு போ-வெய்யுடன் மோதிய அவர் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார்.
Advertising
Advertising

* தேசிய துப்பாக்கிசுடுதல் தகுதிப் போட்டியில் இளம் வீரர் சவுரவ் சவுத்ரி உலக சாதனையை முறியடித்து அசத்தினார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் களமிறங்கிய அவர் 246.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். முன்னதாக 246.3 புள்ளிகளுடன் தான் படைத்த உலக சாதனையை அவரே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

* வியட்நாம் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவின் சவுரவ் வர்மா தகுதி பெற்றார். அரை இறுதியில் ஜப்பானின் மினோரு கோகாவுடன் நேற்று மோதிய வர்மா 22-20, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார்.

* முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் நேற்று மோதிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. குர்பாஸ் 43, நஜிபுல்லா ஸத்ரன் 69* ரன் (30 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), முகமது நபி 38 ரன் (18 பந்து, 4 சிக்சர்) விளாசினர். ஜிம்பாப்வே 10 ஓவர் முடிவில் 59 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

Related Stories: