மாநில ஹாக்கி போட்டி அரை இறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு ஹாக்கி யூனிட்

சென்னை: வருமான வரித்துறை மனமகிழ் மன்றம் சார்பில் நடைபெறும் முதலாவது மாநில அளவிலான ஹாக்கிப்  போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி தகுதி பெற்றது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடைபெற்ற கால் இறுதியில், தமிழ்நாடு காவல்துறை - தமிழ்நாடு ஹாக்கி யுனிட்  அணிகள் மோதின. இப்போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் ஹர்மன் பிரீத்சிங் 3 கோல், வினோதன் ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு காவல்துறை சார்பில் திருமுருகன்,  ரகு தலா ஒரு கோல் அடித்தனர்.

Advertising
Advertising

மற்றொரு கால் இறுதியில் கோவில்பட்டி எஸ்டிஏடி  3-1 என்ற கோல் கணக்கில் மத்திய கலால்-ஜிஎஸ்டி அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. எஸ்டிஏடி அணியின் தினேஷ்குமார் 2 கோல், முகமது யாசின் 1 கோல் அடித்தனர். மத்திய கலால் அணி சார்பில் ஹசன் பாஷா 1 கோல் போட்டார். இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் ஐசிஎப் - எஸ்டிஏடி கோவில்பட்டி அணிகளும், 2வது அரை இறுதியில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் - வருமான வரித்துறை அணிகளும் மோதவுள்ளன. நாளை மாலை இறுதி போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.

Related Stories: