புதுப்பொலிவுடன் போலோ, வென்ட்டோ

போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளன. அவ்வப்போது இந்த கார்கள் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், புதிய தலைமுறை மாடல்கள் இன்னமும் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், மேலும் புதுப்பொலிவுடன் கூடிய மாடலாக போலோ, வென்ட்டோ கார்கள் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்புதிய கார்களில், முன்புற, பின்புற பம்பர் அமைப்புகள், எல்இடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் புதிய கருப்பு வண்ண அலங்கார உதிரிபாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் புதிய அப்ஹோல்ட்ஸ்ட்ரியுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன. மேலும், தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். போக்ஸ்வேகன் கனெக்ட் என்ற புதிய தொடர்பு வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்களில் புதிய ஜிடி லைன் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதலாக விசேஷ கருப்பு வண்ணப்பூச்சுடன்கூடிய மேற்கூரை அமைப்பு, கருப்பு வண்ண அலங்கார பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சன்செட் ரெட் என்ற புதிய சிவப்பு வண்ணமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

மேம்படுத்தப்பட்ட புதிய போலோ காரில் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஜிடி டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 104 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தவிர, 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளிலும் வந்துள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட புதிய போக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (டிஎஸ்ஐ வேரியண்ட்டில் கிடைக்கும்), 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். புதிய வென்ட்டோ கார், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

தற்போது 2 கார்களிலும் வழங்கப்படும் அனைத்து பெட்ரோல், டீசல் இன்ஜின்களுமே பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில், பிஎஸ்-6 இன்ஜின்கள் அறிமுகம் செய்யப்படும் எனத்தெரிகிறது. புதிய போக்ஸ்வேகன் போலோ கார் 5.82 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், புதிய வென்ட்டோ கார் 8.76 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டீசல் இன்ஜின் மாடல்களுக்கு 5 ஆண்டு அல்லது ஒரு லட்சம் கி.மீ. ஸ்டான்டர்டு வாரண்டி திட்டம் வழங்கப்படுகிறது. 1.5 கி.மீ அல்லது 6 ஆண்டு வாரண்டி திட்டம் கூடுதல் கட்டணத்துடன் தேர்வு செய்துகொள்ளலாம் என போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

Related Stories: