டாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

பண்டிகை காலத்தையொட்டி கார், பைக் நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்வது வாடிக்கையான விஷயம்தான்.ஆனால், தற்போது ஆட்டோமொபைல் துறை மிக மோசமான காலக்கட்டத்தில் இருப்பதால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஸ்பெஷல் எடிசன் மாடல் கார் தவிர்க்க முடியாத விஷயமாகி இருக்கிறது. இதனை மனதில் வைத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்யூவி ரக காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது. இப்புதிய மாடலின் டீசரையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது நெக்ஸான் கிராஸ் (Kraz) என்ற பெயரில் வர இருக்கிறது. இந்த காரில் இடம்பெற இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து இதுவரை எந்த விஷயமும் வெளிவரவில்லை. இந்த காரில், கிரில், சைடு மிரர் விசேஷ பூச்சுடன் வரும் எனத்தெரிகிறது. அதேபோன்று, உட்புறத்திலும் இதன் பிரதிபலிப்பாக சிறப்பு அலங்கார விஷயங்களை எதிர்பார்க்கலாம். புதிய அலாய் வீல்களும் வித்தியாசப்படுத்தும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கிராஸ் எடிசன் மாடலை போன்றே, டேஷ்போர்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கலாம். தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் மற்றும் Kraz எடிசன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

Advertising
Advertising

இப்புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன்கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு நெக்ஸான் எஸ்யூவி ரக காரில் கிராஸ் மற்றும் கிராஸ் பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் எனத்தெரிகிறது. இன்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும். சாதாரண வேரியண்ட்டுகளைவிட கூடுதல் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் இப்புதிய டாடா நெக்ஸான் கிராஸ் எடிசன் மாடல் கூடுதல் மதிப்பை வழங்கும். விரைவில் டாடா நெக்ஸான் எஸ்யூவி ரக காரில், பேஸ்லிப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: