யு-19 ஆசிய கோப்பை இந்தியா சாம்பியன்

கொழும்பு: யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில், வங்கதேச அணியை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கையில் நடைபெற்று வந்த இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா யு-19 அணி 32.4 ஓவரில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் துருவ் ஜுரல் 33, ஷாஸ்வத் ராவத் 19, கரண் லால் 37 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

Advertising
Advertising

அடுத்து 50 ஓவரில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச யு-19 அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 33 ஓவரில் 101 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் அக்பர் அலி 23, மிருத்ன்ஜாய் 21, ஹசன் ஷாகிப் 12, ரகிபுல் ஹசன் 11* ரன் எடுத்தனர். இந்தியா யு-19 பந்துவீச்சில் அதர்வா அங்கோலேகர் 5 விக்கெட் கைப்பற்றினார் (8-2-28-5). ஆகாஷ் சிங் 3, வித்யாதர், சுஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதர்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா யு-19 அணி ஆசிய கோப்பையை முத்தமிட்டது.

Related Stories: