சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது டிரோன் தாக்குதல்

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் பதப்படுத்தும் 2 ஆலைகள் மீது இன்று அதிகாலை ஆள் இல்லாத குட்டி விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அரம்கோ ஓக்யாக் மற்றும் கோராய்ஸ் பகுதிகளில் உள்ளன. சவுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் இந்த ஆலையில் தான் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த 2 ஆலைகள் மீது இன்று அதிகாலை ஆள் இல்லாத குட்டி விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்த்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை, இரு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அரம்கோ எண்ணெய் ஆலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் இடத்தில் ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூத்தி போராளிகளும் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி இருந்தனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி அரம்கோ ஆலையை அளிக்க முயன்றனர். இருப்பினும் முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சவூதி அரசு இது குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். இந்த தாக்குதலில் ஆலையில் இருந்தவர்களுக்கு யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related Stories: