தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தின் கால்நடை மேம்பாட்டுக்கழகத்தை பார்வையிட்டார்

நியூசிலாந்து: தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தில் உள்ள கால்நடை மேம்பாட்டுக்கழகத்தை பார்வையிட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்சசி செய்வதற்கான களங்கள் குறித்து கலந்து ஆலோசிக்க அவர் அங்கு சென்றுள்ளார். அவருடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் பாலச்சந்திரன், அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சேவைகள் இயக்குனர் ஞானசேகரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்கள் நியூசிலாந்தின் அமுல்ட்டன் கால்நடை மேம்பாட்டுக்கழகத்தை இன்று பார்வையிட்டனர். கால்நடை  இனப்பெருக்கத்திற்கு தேவையான விந்து சேகரிப்பு நிலையம், கால்நடை மரபணு மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்கள் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பால்பண்ணையை அவர்கள் பார்வையிட்டனர்.

அங்கு பணியாற்றும் முனைவர் ஆலாமோகன் குழுவினருடன் மைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது கால்நடைகளில் நோய் கண்டுபிடிப்பு முறைகள், நோய் முன் கண்காணிப்பு தொடர்பான பயிற்சிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. கால்நடை நோய் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மாணவர்கள் பேராசிரியர்கள் பரிமாற்றம் பயிற்சிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: