பழைய மாடல் ஐபோன் விலை மேலும் குறையும்

புதுடெல்லி: புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஐபோன் 7, எக்ஸ்எஸ் உட்பட பழைய மாடல் போன்கள் விலை 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் புரோ மேக்ஸ் என்ற மூன்று ஐபோன்களை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்திய சந்தையின் மீது ஆப்பிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பிரீமியம் ரக ஸ்மார்ட்போன் சந்தையில் கொரிய மற்றும் சீன நிறுவனங்களுக்கு போட்டியாக களம் இறங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஐபோன் 7, ஐபோன் எக்ஸ்எஸ் உள்ளிட்ட பழைய மாடல் ஐபோன்கள் விலையை 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி சில மாடல்களுக்கு சுமார் 20,000 வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: