உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க வேட்கையில் இந்தியா 6 ஒலிம்பிக் கோட்டாவுக்கு வாய்ப்பு

நூர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் பதக்க வேட்டை நடத்துவதுடன் 6 ஒலிம்பிக் தகுதி இடங்களை உறுதி செய்வதற்காக இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

ஆண்கள் பிரீஸ்டைல் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவருடன் சுஷில் குமார் (74 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), ரவி குமார் (57 கிலோ) உட்பட 10 இந்திய வீரர்கள் பதக்க நம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர். ஆண்கள் கிரெகோ-ரோமன் பிரிவில் மஞ்ஜீத் (55 கி.), மனிஷ் (60 கி.), சாகர் (63 கி.) உட்பட 10 வீரர்களும், மகளிர் பிரீஸ்டைல் பிரிவில் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ), சீமா (50 கி.), லலிதா (55 கி.), சரிதா (57 கி.) உட்பட 10 வீராங்கனைகளும் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.இந்த தொடர் செப். 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories: