கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்விக்காக 8 பேருக்கு 2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த 5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. 5 கோடியில் 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் வழங்கினார். மீதமுள்ள 4 கோடியில் கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 4 கோடியே 87 லட்சத்து 90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் ₹2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பூட்டை கிராமம் (ம) அஞ்சல் பகுதியை சேர்ந்த ஜி.இஸ்மாயில்கான், கடலூர் மாவட்டம் திட்டக்குடி மங்களூர் ஒன்றியம் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த அ.பூமாலை, அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் ஊராட்சி இடைக்காட்டு பகுதியை சேர்ந்த தனலட்சுமி, கிருஷ்ணகிரி பழையபேட்டை அமீனுத்தீன் தெருவை சேர்ந்த அ.நூருல்லா பாஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் காவேரி ரோடு அகத்தியர் வீதியை சேர்ந்த எம்.மேகநாதன், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடைத் தெருவை சேர்ந்த பரம பால்பாண்டியன், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் வடக்கு தெருவை சேர்ந்த எஸ்.வேல்பாண்டி, ஆந்திர மாநிலம் ஏகாம்பரகுப்பம் கே.வி.பி.ஆர். பேட்டை பாவடி தெருவை சேர்ந்த கே.கணேசன் ஆகியோர் பெறுகின்றனர். இந்த தகவலை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: