×

பங்குசந்தையில் சென்செக்ஸ் 280 புள்ளிகள், நிஃப்டியானது 93 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குசந்தையின் குறியீடு எண் சென்செக்ஸ் 280.71 புள்ளிகள் உயர்ந்து 37384.99 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 93.10 புள்ளிகள் உயர்ந்து 11075.90 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்குசந்தையில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் 54.00, ரிலையன்ஸ் 42.20, கோட்டாக் மஹேந்திரா 39.62, இன்போசிஸ் 36.89, பஜாஜ் பைனான்ஸ் 19.93, ஆக்ஸிஸ் பேங்க் 16.87 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஹெச்டிஎப்சி பேங்க் 24.48, ஐடிசி 5.82, பாரதி ஏர்டெல் 5.76, சன் பார்மா 3.40, எச்யுஎல் 1.12 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குசந்தையில் ஐசிஐசிஐ பேங்க் 13.06, ஐஓசி 10.14, ரிலையன்ஸ் 10.05, இன்போசிஸ் 8.82, டைட்டான் கம்பெனி 6.26, பஜாஜ் பைனான்ஸ் 4.93 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஹெச்டிஎப்சி பேங்க் 5.54, ஐடிசி 1.38, பாரதி ஏர்டெல் 1.31, சன் பார்மா 0.90 புள்ளிகள் வரை சரிந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.70, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.99 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த மூன்று வாரங்களாக 30,000க்கு மேல் உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1350 ரூபாய் வரை குறைத்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. ஒரு சவரன் 28,856 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கு விற்பனை ஆகிறது.

Tags : Sensex ,Nifty , Mumbai, Stock Exchange, Sensex, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் சரிவு!