சென்னையில் இன்றும் சரிந்த ஆபரண தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ. 28,856க்கு விற்பனை

சென்னை: கடந்த மூன்று வாரங்களாக 30,000க்கு மேல் உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1350 ரூபாய் வரை குறைத்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. ஒரு சவரன் 28,856 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,607க்கு விற்பனையாகிறது. அதேபோல் 24 கேரட் அளவிலான ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,764 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,112 ஆகவும் உள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கம் விலை, கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத உச்சமாக 30 ஆயிரத்து 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதிக்குப் பின் தங்கத்தின் விலை சரிந்து வருவதுடன், ஒரு வாரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை குறைந்துள்ளது.

அதன்படி, இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து ரூ.28,856 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 128 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 16 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதேபோல, உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிது குறைந்ததால் காரணமாகவே தங்கத்தின் விலை உள்நாட்டு சந்தையில் குறைந்துள்ளது. மேலும், இந்த விலை தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக சந்தையில் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ள நாடுகளிடம் இருந்து பெறக்கூடிய விவரங்கள் வைத்தே தங்கம் விலை மேலும் அதிகரிக்குமா? அல்லது குறைமா? என சொல்ல முடியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories: