சிறுபான்மை பள்ளிகளில் மொழி தெரிந்த வட்டார கல்வி அலுவலர் ஆய்வு நடத்த உத்தரவு: காங்கிரஸ் சிறுபான்மை துறை வரவேற்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை:  தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்களில் சிறுபான்மை மொழி தெரிந்த வட்டார கல்வி அலுவலருக்கு, வருவாய்  மாவட்டத்தில் உள்ள உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழி பள்ளிகளை ஆண்டாய்வு செய்ய சிறப்பு அதிகாரம் வழங்கி ஆவன செய்ய வேண்டும்’ என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர்  உத்தரவிட்டுள்ளார். இதை தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: