மகிந்திரா பொலேரோ ‘சிட்டி பிக்-அப்’ அறிமுகம்

சென்னை: அதிக எடையுள்ள சரக்குகளை எளிதாக ஏற்றிச்செல்ல வசதியாக மகிந்திரா நிறுவனம்,  பொலேரோ சிட்டி பிக்-அப் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய பொலேரோ சிட்டி பிக்-அப், அதிக வசதிகள், வலுவான சஸ்பென்ஷன் சரக்குகளை சுமக்கும் பெரிய அளவிலான கார்கோ பாக்ஸ், நீடித்து உழைக்கும் ஆற்றல் கொண்டது. உறுதியான போக்குவரத்தை அளிக்கும் ரோட் கிரிப்  அம்சங்களுக்காக 38.1 செ.மீ அகல டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயர் செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 2,523 சிசி எம்.2டிஐ இன்ஜின், 46.3 கி.வா (63 எச்பி) ஆற்றல் மற்றும் 195 என்எம் இழுவிசை திறன் கொண்டுள்ளது.  ஓட்டுநருடன் துணை ஓட்டுநர் அமர விசாலமான இருக்கை வசதி உள்ளது.

 அறிமுக நிகழ்ச்சியில், மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் ஆட்டோமோட்டிவ் பிரிவு துணை தலைவர் விக்ரம் கர்கா கூறுகையில், ‘‘நகர பகுதிகளில் போக்குவரத்து வாகனங்களை சுலபமாக இயக்கும் அம்சம்,  போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வசதி, வாகன உரிமையாளர்களுக்கு லாபமளிக்கும் வருவாயை ஈட்டுதல் போன்றவற்றை மையமாக கொண்டு பொலேரோ சிட்டி பிக்-அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: