அமெரிக்காவுக்கு சீனா வரிச்சலுகை

பீஜிங்:  மீன் உணவு வகைகள், கேன்சர் உபகரணங்கள் உள்பட 16 வகையான அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை விலக்கி கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.  வர்த்தகப்போர் காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி பொருட்கள் மீது வரி விதிப்பை உயர்த்தி வந்தன. இதனால், உலகப் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பிற நாடுகள் கவலை  தெரிவித்துள்ளன.

 இந்த இருநாடுகளிடையே அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் `கால்நடை தீவனம், மீன் உணவு, கேன்சர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 16 வகையான  அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் 17ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி விலக்கு ஓராண்டு வரை அமலில் இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதில்  அமெரிக்காவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ், பன்றி இறைச்சி இடம் பெறவில்லை.

Related Stories: