எம்எல்ஏ கே.பி.பி.சாமியிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்  கே.பி.பி.சாமி எம்எல்ஏவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் வசிக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது  வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் அவரை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  நேற்று  திருவொற்றியூர் கே.வி.கே குப்பத்தில் உள்ள  இல்லத்திற்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.

Advertising
Advertising

அதேபோல், உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் திருவொற்றியூர்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  டி.சி.விஜயனையும் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அவருடன் திமுக  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.டி.சேகர், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், மாணவர் அணி துணைச் செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் எம்.வி.குமார் ஆகியோர் சென்றனர்.

Related Stories: