×

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி 2 வாரம் தள்ளிவைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் சீனா இடையிலான வர்த்தக போரால் இரண்டு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டுக் வரிகளை விதித்து வருகின்றன. இதனால் உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரியானது 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அக்டோபர் 1 ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சீனாவில் 70வது தேசிய தினம் அக்டோபர் 1ம் தேதி கொண்டாட இருப்பதால் கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியூஜி அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து அதனை ஏற்று நல்லெண்ண நடவடிக்கையாக கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் 1ம் தேதிக்கு பதில், அக்டோபர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க சீனா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாத மத்தியில் வாஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Tags : Trump ,Chinese ,US , Chinese Import Item, Tax, 2 Week, Postponement, Trump Notice
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...