3 ஐபோன்கள் அறிமுகம் 27ம் தேதி முதல் விற்பனை

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் புரோ மேக்ஸ் என்ற மூன்று ஐபோன்களை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஐபோன்களுடன் 7வது தலைமுறை ஐபேட், ஆப்பிள் கடிகாரம்-5 ஆகியவற்றை கலிபோர்னியாவின் குபர்டினோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. ஐபோன் 11 பச்சை, கருஞ்சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களிலும், ஐபோன் புரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகியவை சாம்பல், சில்வர், தங்கம் மற்றும் புதிய பச்சை ஆகிய நிறங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த  புதிய ஐபோன்கள் இந்தியாவில் இந்த மாதம் 27ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

6.1 அங்குலம் அளவுள்ள ஐபோன் 11, விலை ரூ.64,900ல் இருந்து தொடங்குகிறது. ஐபோன் 11 மாடலில் பின்பக்கம் 2 கேமராக்கள் உள்ளன. அதேபோல், 5.8 அங்குலம் அளவுள்ள ஐபோன் புரே 11, விலை ரூ.99,900ல் தொடங்குகிறது. 6.5  அங்குலம் அளவுள்ள ஐபோன் 11 புரோ மேக்ஸ் விலை ரூ.1,09,900ல் தொடங்குகிறது. புதிய 7வது தலைமுறை ஐபேட் 10.2 அங்குலம் அளவு திரையும், சில்வர், சாம்பல், தங்கம் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.29,900ல் தொடங்குகிறது. இது அமெரிக்கா மற்றும் 25 நாடுகளில் இந்த மாதம் 30ம் தேதி  முதல் விற்பனைக்கு வருகிறது. பல்வேறு புதிய வசதிகளைக் கொண்ட நவீன கடிகாரத்தையும் (சீரியஸ் 5) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.40,900ல் தொடங்குகிறது.

Tags : 3 iPhones
× RELATED மணப்பாறையில் பரபரப்பு நிதியுதவி ரூ.5.27...