×

பாக்.கில் பெட்ரோலை மிஞ்சியது பால் விலை லிட்டர் 140க்கு விற்பனை

கராச்சி: பாகிஸ்தானில் நேற்று மொகரம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் அவ்வப்போது ஊர்வலங்கள் நடைபெறும். ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு குளிர் நீர், பழச்சாறு மற்றும் பால் விநியோகிப்பது  வழக்கமாகும். இதன் காரணமாக கராச்சி உட்பட பல்வேறு இடங்களிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக பால் தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பினால் அதன் விலை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில்  தற்போது கராச்சி மற்றும் சிந்த் மாகாணங்களில் பால் லிட்டருக்கு ரூ.140 என விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.113 மற்றும் டீசல் லிட்டர் ரூ.91க்கு விற்கப்படுகின்றது.


Tags : Pakistan, petrol, milk
× RELATED நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்