கர்பாலாவில் நெரிசல் ஈரானில் 31 பேர் பலி

கர்பாலா:    ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள கர்பாலா  நகரில் ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு முகமது நபியின் பேரன் ஹூசைனின் நினைவிடம் அமைந்துள்ளது. இவர் உயிர் நீத்த நாள் ‘ஆஷூரா’ என்ற  பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  ஒவ்வொரு ஆண்டும் ஆஷூரா அன்று, ஈரான், வளைகுடா நாடுகள், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இங்கு பயணம் மேற்கொள்வார்கள். நேற்று முன்தினம் ஆஷூராவை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் கொடியேந்தி முழக்கமிட்டபடி ஹூசைன் நினைவிடம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.  அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Tags : Iran ,Karbala , Karbala, Iran, 31 killed
× RELATED புழல் மத்திய சிறையில் ஈரான் கைதியிடம் செல்போன் பறிமுதல்