திமுக நிர்வாகி படம் திறப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும், திமுக மூத்த உறுப்பினருமான மறைந்த நமச்சிவாயத்தின் நூற்றாண்டு விழா திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம்  மாலை நடைபெற்றது.

 கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிகணேசன் வரவேற்றார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்.பி ஆகியோர் நமச்சிவாயம்  திருஉருவ படத்தை திறந்து வைத்து, கட்சியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். இதில் நிர்வாகிகள் குமரேசன், இளவரசன், சம்பத், தினேஷ், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நடராஜன், காமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திமுக மூத்த நிர்வாகி ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.
Advertising
Advertising

Related Stories: