அண்ணாசாலை இருவழியாக மாற்றம் தினமும் 256 எம்டிசி பஸ்கள் இயக்கப்படும்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அண்ணாசாலை இருவழியாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, அதன் வழியாக 256 எம்டிசி பஸ்கள் இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னை அண்ணா சாலையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 52 வழித்தடங்களில் நாளொன்றுக்கு 256 பேருந்துகள் வாயிலாக 2,963 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2011ம் ஆண்டு  அண்ணா சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.  இச்சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகிய சாலைகள் வழியாக இயக்கப்பட்டன.  தற்பொழுது அண்ணா சாலையில் இருவழியாக  வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகத்தின் வாயிலாக அண்ணாசாலையில் இருவழியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி பிராட்வேயில் இருந்து ஊனமாஞ்சேரி (பஸ்களின் எண்ணிக்கை-1), தியாகராய நகர் (5), கே.கே.நகர் (11), அய்யப்பன்தாங்கல் (10), பழந்தண்டலம் (1), சைதாப்பேட்டை (2), குன்றத்தூர் பேருந்து நிலையம் (1),  கீழ்கட்டளை (4), ராமாபுரம் (2), சைதாப்பேட்டை மேற்கு (14), நங்கநல்லூர் (4) ஆகிய பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் சென்ட்ரல்-திருப்போரூர் (11), பிராட்வே- பெரும்பாக்கம் (2), அயனாவரம்-பெசன்ட் நகர் (15), அயனாவரம்- திருவான்மியூர்(5), திருவான்மியூர்-கொரட்டூர் (3), வில்லிவாக்கம்- வேளச்சேரி (1) என பஸ்கள் இயக்கப்படும். இதேபோல், பிராட்வேயில் இருந்து அய்யப்பன்தாங்கல் (22), சிஎம்பிடி (1), மாங்காடு (2), சாலிகிராமம் (1), முகலிவாக்கம் (2), தாம்பரம் கிழக்கு (1), மாம்பாக்கம் கூட்டு ரோடு    (1), புழுதிவாக்கம் பே.நி(2), பொழிச்சலூர் (1),  அஸ்தினாபுரம்    (4), மூவரசம்பேட்டை (2), பூந்தமல்லி (25), குத்தம்பாக்கம் (1), நேமம் (2), வெள்ளவேடு (1), மாங்காடு (2), செம்பரம்பாக்கம் (2),

அனகாபுத்தூர் (5), குன்றத்தூர் முருகன் கோயில்  (1), பம்மல் காமராஜபுரம்  (1), சங்கரா மருத்துவமனை (1), நந்தம்பாக்கம் கிராமம் (2), தண்டலம் கிராமம் (2), குன்றத்தூர் (18), சோமங்களம் (1), ஏ.ஜி.எஸ். ஆபிசர்ஸ் காலனி (1), தாம்பரம் கிழக்கு (10), சித்தாலபாக்கம் டி.என்.எச்.பி (1), கூடுவாஞ்சேரி (16), ஓட்டியம்பாக்கம்  (2), புழுதிவாக்கம் (1), அமரம்பேடு (2), வில்லிவாக்கம்-பட்டினப்பாக்கம் (20), கொருக்குப்பேட்டை ரயில் நிலையம்- தாம்பரம் (8) என ெமாத்தம் 256 பஸ்கள் 2963 பயண நடைகளில் இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : MTC , Annamalai, MTC buses, administration
× RELATED பொதுமக்களின் வசதிக்காக எம்டிசி...