பஸ் விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு 6 லட்சம் இழப்பீடு: எம்டிசிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பஸ்சில் இருந்து விழுந்து, இறந்த பெண் சித்தாள் குடும்பத்தினருக்கு 6 லட்சம் இழப்பீடு வழங்க எம்டிசி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரனை, கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சாரதா. இவர் சித்தாள் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு வேலைக்காக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.  நன்மங்கலம் பேருந்து நிலையம் வந்தபோது சாரதா கையில் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். ஆனால் அவர் இறங்குவதை பார்க்காமல் கவனக்குறைவாக டிரைவர் பேருந்தை எடுத்துள்ளார்.

அப்போது பேருந்தின் படியில் இருந்து சாரதா தவறி கீழே விழுந்து  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  சாரதா உயிரிழந்தார்.
இதனால் அவரது இழப்பிற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தரக்கோரி அவரது உறவினர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் சாரதா பஸ் ஓட்டுனரின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளார்.  மேலும் அவர் சித்தாள் வேலை செய்து வந்துள்ளார். அதில் தினமும் 250 வரை வருமானம் வந்துள்ளது. எனவே அவரது வயதை கருத்தில் கொண்டு 6 லட்சத்து 44 ஆயிரத்து 500 இழப்பீடாக வழங்க சென்னை மாநகர போக்குவரத்து  கழகத்துக்கு உத்தரவிட்டார்.

Tags : MTC ,bus accident , Bus Accident, Dead Woman, MTC, Court
× RELATED பொதுமக்களின் வசதிக்காக எம்டிசி...