மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் (46). தண்டையார்பேட்டை மின் வாரியத்தில் மின் பராமரிப்பு பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் தண்டையார் பேட்டை மார்க்கெட் பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வந்த புகாரையடுத்து ஜீவானந்தம் மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு மின்சார பில்லரில் பழுது ஏற்பட்டிருந்தது.  அந்த பழுதை சரி செய்து  கொண்டிருந்தபோது திடீரென்று ஜீவானந்தத்தின் மீது மின்சாரம் பாயந்தது.  இதில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜீவானந்தம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன ஜீவானந்தத்துக்கு ஜெகதா  என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

Tags : Electricity,employee dies
× RELATED வில்லிவாக்கத்தில் பரபரப்பு 10 லட்சம் கேட்டு ரயில்வே ஊழியரின் மகன் கடத்தல்