கத்தியுடன் சுற்றிய 5 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர் போலீசார் காலடிப்பேட்டை மேற்கு மாடவீதி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த 5 பேரை பிடித்து  சோதனையிட்டபோது 2 அடி நீளமுள்ள 2  கத்திகள் வைத்திருந்தது தெரிந்தது. இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூரை சேர்ந்த சுதாகர் (23) தனசேகர் (22), ராமச்சந்திரன் (34), முருகன் (22), சரவணன் (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து  கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: