நிறுவனங்களுக்கு கல் அரைக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் அளித்த அனுமதிக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: கல் அரைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு யூனிட்டுகள் அமைக்க அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாடு வாரியத்தின்  உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.    சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: பாறைகளை ஜல்லிகளாக உடைக்க அமைக்கப்பட்டுள்ள கல் அரைக்கும் யூனிட்டுகளால் காற்று மாசுவால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படுவதை தடுக்க கடந்த 2004ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனைகள் கொண்டு வந்தது.    இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு பிறப்பித்தது. எனவே, விதிமுறைகளுக்கு முரணான கல் அரைக்கும் யூனிட்டுகளுக்கு அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து  உத்தரவிட வேண்டும்.

Advertising
Advertising

   இந்த மனு நீதிபதிகள்  சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்-சாண்ட் மற்றும் ஜல்லியின் உற்பத்தியை அதிகரிக்க இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கல் அரைக்கும்  உரிமையாளர் சங்கத்தினர் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.   வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். அதுவரை, ஒரு கிலோ மீட்டர்  இடைவெளிக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்து  கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்  உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: