சோளிங்கரில் 7.4 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் : தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை: சோளிங்கரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட ரூ.7.4 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் நீதிமன்றங்களை கண்டறிந்து சொந்த கட்டிடம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 2.7 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினை  கட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், 4 சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகன பார்க்கிங், மற்றும் ஜெனரேட்டர் அறைகளும் அமையும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக, தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: