மண்டபம் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு புதிய ரோந்து படகு

மண்டபம் : மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு புதிய ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு 2 அதிநவீன ரோந்து கப்பல்கள் வழங்கப்பட்டு பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் மண்டபத்திலுள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தற்போது கூடுதலாக ஒரு ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரைவர் உட்பட 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த ரோந்து படகு மூலம் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என தமிழக கடலோர பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: