ஆட்டோவில் இருந்து விழுந்து பள்ளி மாணவி பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ்வடுகன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் மதுலேகா(12). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாைல பள்ளியில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அதிகளவு பயணிகள் இருந்ததால் டிரைவர் சீட் அருகில் அமர்ந்து மதுமிதா பயணித்துள்ளார். ஒரு வளைவில் ஆட்டோ சென்றபோது மதுமிதா தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

Advertising
Advertising

Related Stories: