கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் கடும் போட்டி

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, துணைவேந்தர் குழுவின் தலைவராக முன்னாள் கூடுதல் செயலர் ஷீலா பிரியா நியமிக்கப்பட்டார். 2 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.  இதையடுத்து, கடந்த மாதம் துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, செப்டம்பர் 9ம் தேதி வரை அவகாசம் தரப்பபட்டது. இதன்படி, மொத்தம் 147 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: