நாகர்கோவிலில் மசாஜ் சென்டரில் செக்ஸ்: இளம் பெண்களை காட்டி வாலிபர்களிடம் பணம் வசூல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை காட்டி வாலிபர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.5 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டிய கட்டிடத்துக்கு மாத வாடகையாக ரூ.25 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். நாகர்கோவில் அனந்தன்நகரில், மசாஜ் வைத்தியசாலை பெயரில் விபசாரம் நடப்பதாக, ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டு, அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்குள் சந்தேகப்படும் படியான ஆண்கள், பெண்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று மதியம் அதிரடியாக அந்த வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர்.

Advertising
Advertising

அப்போது அங்குள்ள அறைகளில் வாலிபர்கள், பெண்கள் அரை குறை ஆடைகளுடன் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர்கள் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 2 ஆண்களும், 2 இளம்பெண்களும் பிடிபட்டனர். அவர்களை ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இரு இளம்பெண்களும் கோவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் பிடிபட்ட இரு வாலிபர்கள், சுசீந்திரம் அருகே உள்ள பூட்டேற்றி காந்திநகர் பகுதியை சேர்ந்த அபிஷேக் (25), திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஆதர்ஸ் (24) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நடந்த விசாரணையில் இந்த வைத்தியசாலையை அனந்தநகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்தி வந்ததும், இந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கேசவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் அபிஷேக், ஆதர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. வைத்தியசாலை என்ற பெயரில், சுப்பிரமணியனிடம் இருந்து ஆனந்த் என்பவர் வாடகைக்கு வீட்டை வாங்கி உள்ளார். ரூ.5000 மதிப்புள்ள இந்த வீட்டுக்கு, மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்துள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் வாலிபர்களிடம், மசாஜ் செய்ய வேண்டும் என கூறி பணம் வசூலித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்வது போல் நடித்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பெண்களை அழைத்து வந்துள்ளனர். அந்த பெண்களுக்கு அழகான பெண்களுக்கு மாத சம்பளம் கொடுத்துள்ளனர். மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் இளைஞர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது வைத்தியசாலை நடத்தி வந்த ஆனந்த் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனந்த், புரோக்கர்களை வைத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார். கல்லூரி மாணவர்கள் சிலரும் இந்த மசாஜ் சென்டருக்கு வந்து சென்றுள்ளனர். ஆனந்த் பிடிபட்டால் தான் இது தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: